புனித வின்சென்ட் டி போல் மானிப்பாய் புனித அன்னம்மாள் பந்தியின் 27ஆவது வருடாந்த கூட்டம் கடந்த 02ஆம் திகதி சனிக்கிழமை மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மானிப்பாய் பிரதேச சபை கிறிஸ்தவ மத மற்றும் கலாச்சார உத்தியோகத்தர் திருமதி. ஜீன் மறீடா அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். மறைமாவட்ட புனித வின்சென்ட் டி போல் மத்திய சபை ஆன்ம ஆலோசகர் அருட்தந்தை நேசநாயகம் அவர்கள் சிறப்பு விருத்தினராகவும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் மறைமாவட்ட வின்சென்ட் டி போல் மத்திய சபை உறுப்பினர்கள், ஏனைய பந்திகளின் பிரதிநிதிகளென 60 வரையானவர்கள் பங்குபற்றினர்.

By admin