பருத்தித்துறை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் பங்குதந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 1,2,3 ஆம் திகதிகளில் நடைபெற்றன.

முதல் இரண்டு தினங்களில் பருத்தித்துறை புனித தோமையார், தும்பளை புனித மரியாள் ஆலயங்களிலும் மூன்றாம் நாள் நிகழ்வு தும்பளை புனித லூர்து அன்னை திருத்தலத்திலும் இடம்பெற்றன.

இத்தவக்கால தியானத்தில் அமலமரித்தியாகிகள் சபையின் மறையுரைஞர் குழும அருட்தந்தையர்கள் ஜெயபாலன், யூட் அவலின், யூட் கறோவ், அமிர்தராஜ், றொயிஸ்ரன் அருட்சகோதரர்கள் மரினோ கிலோத், மற்றும் டிலுசன் ஆகியோர் கலந்து சிலுவைப்பாதை தியானம், திருப்பலி, நற்கருணை வழிபாடு மற்றும் குணமாக்கல் வழிபாடு என்பற்றினூடாக பங்குமக்களை வழிப்படுத்தினார்கள்.

By admin