சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நான்காவது குழுவினராக இளவாலை மறைக்கோட்ட பங்குகளை சேர்ந்த இறைமக்கள் கலந்துகொண்ட தியானம் 09 ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது.

திருத்தல பரிகாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இத்தியானத்தில் திருச்சிலுவைப்பாதை தியானம், நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அருட்சாதனம், திருப்பலி என்பவை இடம்பெற்றன.

By admin