மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் கல்முனை மறைக்கோட்ட இளைஞர் ஒன்றியத்தினர், மறையாசிரியர்கள், மற்றும் திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்கள் இணைத்து முன்னெடுத்த தவக்கால தியானம் கடந்த 02ஆம் திகதி சனிக்கிழமை சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் நடைபெற்றது.
இச்சபைகளின் மறைக்கோட்ட ஆன்மீக இயக்குநர்களின் ஒழுங்குபடுத்தலில் திருச்சிலுவை திருத்தல பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் 100ற்கும் அதிகமானோர் பங்குபற்றினர்.
அத்துடன் அன்றைய தினம் கல்முனை மறைக்கோட்ட பங்குகளைச் சேர்ந்த மேய்ப்புப்பணிச்சபை, வின்சென்ட் டி போல் சபை மற்றும் மரியாயின் சேனை அங்கத்தவர்களுக்கான தவக்கால தியானம் தேத்தாத்தீவு புனித யூதாததேயு திருத்தலத்தில் நடைபெற்றது.
கல்முனை மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வை அருட்தந்தையர்கள் றிவேள், திருச்செல்வம், வின்செஸ்லோஸ் ஆகியோர் இணைந்து நெறிப்படுத்தியிருந்தனர்.