குருநகர் பங்கு வழிபாட்டு குழுவினர் மற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்கள் இணைந்து முன்னெடுத்த புத்தளம் தலவில புனித அன்னம்மாள் ஆலயம் நோக்கிய தவக்கால யாத்திரை 8, 9ஆம் திகதிகளில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இத்தவக்கால யாத்திரையில் 50 வரையானவர்கள் பங்குபற்றினர்.

தலவில புனித அன்னம்மாள் ஆலயத்திற்கு யாத்திரை மேற்கொண்ட இவர்கள் அங்கு நடைபெற்ற திருப்பலி, சிலுவைப்பாதை, நற்கருணை வழிபாடு என்பவற்றில் கலந்துகொண்டனர்.

By admin