தவக்காலத்தை முன்னிட்டு யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மையத்தின் ஏற்பாட்டில் பசாம் பாடல் போட்டி நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அனைத்து வயதினரையும் உள்ளடக்கி நடைபெறவுள்ள இப்போட்டியில் பங்குபற்ற விரும்புபவர்கள் 4 நிமிடங்கள் உள்ளடங்கலாக பாடலை பாடும்போது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ பதிவு செய்து 0741626719 என்ற இலக்க Whatsapp செயலியூடாக அனுப்பவேண்டும்.
போட்டியாளர்களின் வீடியோக்கள் யாழ் மறை அலை தொலைக்காட்சி Youtube தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு நடுவர்களின் தீர்ப்போடு பார்வையாளர்களின் கருத்து மற்றும் எண்ணிக்கைக்கு ஏற்ப வெற்றியாளர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள்.
இப்போட்டியில் பங்குபற்றும் போட்டியாளர்கள் பங்குனி மாதம் 10ஆம் திகதிக்கு முன்பாக வீடியோ பதிவை அனுப்பிவைக்க வேண்டும்.