மட்டக்களப்பு மறைமாவட்டக் குருக்களுக்கான வருடாந்த தவக்கால ஆயத்த தியானம் கடந்த 04ஆம் திகதி தொடக்கம் 09ஆம் திகதி வரை கண்டி லெவல்ல பாத்திமா அன்னை தியான இல்லத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யோசப் பொன்னையா அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தியானத்தை இந்தியா திருச்சி மறைமாவட்டத்திலிருந்து வருகைதந்த அருட்தந்தை மனோகரன் அவர்கள் நெறிப்படுத்தினார்.