யாழ். திருமறைக்கலாமன்ற தயாரிப்பான செம்பாத்தா கூத்துருவ நாடகம் கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். திருமறைக்கலாமன்ற அரங்கில் மேடையேற்றப்பட்டது.
இலங்கையில் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வன்னி தென்னமரவடி பிராந்தியத்திற்கு தலைமை வகித்த மரிய செம்பாத்தாவின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு திரு. ஜோன்சன் ராஜ்குமார் அவர்களால் எழுதப்பட்டு அவரினாலேயே நெறியாள்கை செய்யப்பட்ட இக்கூத்துருவ நாடகத்தை அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுமக்களென பலரும் கண்டுகழித்தனர்.