பாசையூர் பங்கு பணிமனை வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த பொதுநிலையினர் பணியக கட்டட கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா கடந்த 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து புதிய கட்டடத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
புதிதாக அமைக்கப்பட்ட இக்கட்டடத்திற்கு ஆயர் விக்ரர் ஞானப்பிரகாசம் பொதுநிலையினர் பணியகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஆயர் விக்ரர் ஞானப்பிராசம் அவர்கள் பாசையூர் மண்ணில் பிறந்து அமலமரித்தியாகிகள் சபை குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு பாகிஸ்தான் நாட்டில் பணியாற்றி 2010ஆம் ஆண்டில் ஆயராக திருப்பொழிவு செய்யப்பட்டு பாகிஸ்தான் குவேற்றா ஞருநுவுவுயு மறைமாவட்த்தில் பணியாற்றி 2020 ஆம் இறைவனடி சேர்ந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.