யாழ்ப்பாணம் ஏழாலை புனித இசிதோர் றோ.க.த.க பாடசாலையின் ஓய்வுநிலை அதிபர் திரு. சிவசாமி நல்லகுமார் அவர்களின் பிறந்த தின மணிவிழா நிகழ்வு கடந்த 08ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் திருமதி. சந்திரகலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிபருக்கான கௌரவிப்புக்களும் அவருடைய மணிவிழாவை நினைவுகூர்ந்து நல்ல குமாரின் நல்லை மலர் என்னும் நூல் வெளியீடும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் சுன்னாகம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்கள் கலந்து ஆசியுரை வழங்கியதுடன் வட மாகாண கல்விப்பணிப்பாளர் திரு. யோன் குயின்ரஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் வலிகாம வலயக்கல்வி பணிப்பாளர் திரு. பிறட்லி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் வலிகாம வலய ஆரம்பகல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் திரு. முரளிதரன் மற்றும் உடுவில் கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு. இராமநாதன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.