‘உருமாற்றத்துக்குரிய இறையியல் கல்வி’ எனும் கருப்பொருளில் மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட இறையியல் கருத்தரங்கு கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி தொடக்கம் 9ஆம் திகதி வரை நடைபெற்றது.
மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரி அதிபர் அருட்பணியாளர் கமலக்குமாரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த இறையியல் பேராசிரியர் எலியாசார் பெர்ணான்டேஸ் அவர்கள் கலந்து கருத்துரைகள் வழங்கி கலந்துரையாடல்களை ஊக்கப்படுத்தி நிகழ்வை வழிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் 40 வரையான அருட்பணியாளர்களும் இறையியல் மாணவர்களும் பங்குபற்றி பயனடைந்தனர்.