யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் நடாத்தப்படும் உள ஆற்றுப்படுத்தல் டிப்ளோமா பயிற்சிநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
கா.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், குருக்கள், துறவியர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் உள ஆற்றுப்படுத்தல் சேவையில் ஆர்வமுள்ளவர்கள் இக்கற்கைநெறிக்கு விண்ணப்பிக்க முடியுமெனவும் ஒருவருட காலத்தை கொண்ட இக்கற்கைநெறி வார இறுதி நாட்களில் இடம்பெறுமெனவும் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்கள் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இப்பயிற்சிநெறிக்கான விண்ணப்பங்களை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலைய அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் பயிற்சி நெறியில் இணைந்து கொள்ள விரும்புவோர் வருகின்ற பங்குனி மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியுமெனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இப்பயிற்சிநெறி கொழும்பு Tertiary And Vocational Education இன் அங்கீகாரம் பெற்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.