கரித்தாஸ் நிறுவன நோர்வே நாட்டு பிரதிநிதிகள் உணவுப்பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முன்னடுக்கப்பட்ட செயற்பாடுகளை கண்டறியும்நோக்கொடு இப்பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தை தரிசித்து அங்கு முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல் மற்றும் கள தரிசிப்பு நிகழ்வுகளில் பங்குபற்றினர்.
கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இலங்கை கரித்தாஸ் நிறுவன செயற்பாடுகளுக்கு பொறுப்பான யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வில் நோர்வோ நாட்டு பிரதிநிதிகள் திரு. தொபியாஸ் மற்றும் செல்வி. மரியா, கரித்தாஸ் நிறுவன தேசிய இயக்குனர் அருட்தந்தை லூக் நெல்சன் பெரேரா, உணவுப்பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்ட குழாமினர் மற்றும் ஊழியர்கள் கலந்து உணவுப்பாதுகாப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
தொடர்ந்து அன்று மாலை ஆணைவிழுந்தான் மற்றும் வன்னேரி கிராமங்ளுக்கு இவர்கள் கள தரிசிப்பிபை மேற்கொண்டு இங்கு நடைபெற்ற செயற்பாடுகளை அறிந்துகொண்டதுடன் அங்கு நிறுவப்பட்ட கிராம அறிவு மையத்தினையும் திறந்துவைத்தார்கள்.