மன்னார் மறைமாவட்டம் வவுனியா இறம்பைக்குளம் பிரதேசத்தில் புதிதாக அமையப்பெற்ற புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலை கல்வியாண்டு ஆரம்ப நிகழ்வு கடந்த 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதிய மாணவர்களுக்கான அனுமதிப்பத்திரங்களும் ஆசிரியர்களுக்கான நியமனமும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சரத்சந்திரா ஆகியோர் பிரதம விருந்தினர்களாகவும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் மற்றும் வவுனியா கல்வியியற் கல்லூரி பீடாதிபதி கலாநிதி கமலகுமார் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும். 56ஆவது
இராணுவ படைப்பிரிவு கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள காரியவசம் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.