கரையோர சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பொலிகண்டி குழுந்தை இயேசு ஆலய இளையோர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோதிநாதன் அவர்களின் வழிகாட்டலில் மரநடுகை நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பொலிகண்டி கடற்கரையோரத்தில் இளையோர் ஒன்றியத்தினரால் 20 சவுக்கு மரங்கள் நாட்டிவைக்கப்பட்டன.