கனடா திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் வவுனியா வடக்கு ஒதியமலை பிரதேசத்திலுள்ள பட்டிக்குடியிருப்பு அ.த.க. பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அளம்பில் சுவாமி தோட்டத்திற்கு பொறுப்பான அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருமறைக்கலாமன்ற உதவி நிர்வாக இயக்குனர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்கள் கலந்து மாணவர்களுக்கான ஒருதொகுதி கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தார்.