யாழ். திருமறைக்கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் திருமதி அஞ்சலா அல்போன்சஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் வடமாகாண கல்வி பணிப்பாளர் திரு. ஜோன் குயின்ரஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். பல்கலைக்கழக சமூகவியல் துறை சிரேஸ்ட விரிவுரையையாளர் திரு. இராஜேஸ்கண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.