யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள புனித டொன் பொஸ்கோ கல்வியகத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித டொன் பொஸ்கோ திருவிழா மற்றும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 31ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
கல்வியக இயக்குநர் அருட்தந்தை டிக்ஸன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவிழா திருப்பலியை சல்வற்றோறியன் சபையை சேர்ந்த அருட்தந்தை பிரபு அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலியை தொடர்ந்து கல்வியகத்தில் கணினி மற்றும் ஆங்கில் கற்கைநெறிகளை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.
யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்கள் பிரதம விருந்தினராகவும் சல்வற்றோறியன் சபையை சேர்ந்த அருட்தந்தையர்கள் பிரபு மற்றும் நிர்மல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளென பலரும் கலந்துகொண்டனர்.