பொலிகண்டி குழந்தை இயேசு ஆலயம் மற்றும் வல்வெட்டித்துறை புனித செபஸ்தியார் ஆலயங்களை சேர்ந்த மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட கள அனுபவ சுற்றுலா நிகழ்வு கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.
சக்கோட்டை பங்குத்தந்தை அருட்தந்தை யோதிநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து திருகோணமலை மாவட்டத்திற்கு சென்று அங்குள்ள பிரசித்தி பெற்ற இடங்களை தரிசித்தனர்.
இந்நிகழ்வில் 50ற்கும் அதிகமானவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.