குருநகர் புதுமைமாதா ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
24ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்று வந்த நிலையில் 01ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களும் நற்கருணைவிழா திருப்பலியை நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
திருவிழா அன்று மாலை அன்னையின் திருச்சுருப பவனி ஆலயத்தை சுற்றியுள்ள வீதிவழியாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து அன்னையின் ஆசீரை பெற்றுக்கொண்டனர்.