யாழ். டேவிட் வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்ற கலைத்தூது அழகியல் கல்லூரியின் கல்வி ஆலோசனை சபைக் கூட்டம் 23ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி அதிபர் திருமதி அஞ்சலா அப்போன்சஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கல்லூரியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் திருமறைக்கலாமன்ற இயக்குநர் அருட்தந்தை ஜெயசேகரம், பிரதி இயக்குநர் திரு. ஜோன்சன் ராஜ்குமார், கல்லூரி உப அதிபர் திரு. அன்புராசா, ஆலோசனைச் சபை மற்றும் கல்வி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கலந்துகொண்டார்கள்.