அளம்பில் பிரதேசத்தில் அமைந்துள்ள யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க திருஅவைக்கு சொந்தமான சுவாமி தோட்டத்தின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுவந்த புனித இசிதோரின் வரவேற்பு திருச்சொருப கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
சுவாமி தோட்டத்திற்கு பொறுப்பான அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அளம்பில் பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்கள் கலந்து அழகிய தோற்றத்துடன் அமைந்த வரவேற்பு சொருபத்தை ஆசீர்வதிக்க அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்கள் அதனை திறந்துவைத்தார்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2024/01/26.jpg)