நல்லாயன் துறவற சபையை சேர்ந்த அருட்சகோதரி தீபா சிவபாலன் அவர்களின் நித்திய அர்ப்பண நன்றி திருப்பலி 13ஆம் திகதி கடந்த சனிக்கிழமை ஒட்டுச்சுட்டான் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை கான்ஸ்போவர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலியும் தொடர்ந்து அருட்சகோதரிக்கான கௌரவிப்பும் இடம்பெற்றன.
குருக்கள், துறவிகள், அருட்சகோதரியின் உறவினர்கள், பங்குமக்களென பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2024/01/09-1.jpeg)