யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பங்கைச் சேர்ந்த திரு. டனீசியஸ் மரியாம்பிள்ளை அவர்கள் நற்கருணை பணியாளராக உருவாக்கப்பட்டு யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகசாம் அவர்களினால் பணிப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளார்.
பணிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு கடந்த மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். சுண்டுக்குழி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் நடைபெற்றது.
அன்றைய தினம் பங்குத்தந்தை அருட்தந்தை யேசுதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் தனது பணிப்பொறுப்பை இவர் ஏற்றுக்கொண்டார்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2024/01/20-1.jpg)