புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் பங்கு மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா கடந்த 29ஆம் திகதி நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை எட்வின் நரேஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை நிகழ்வுகள் மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு என்பன இடம்பெற்றதுடன் பங்குமக்களின் ஆக்கங்களை தாங்கி ஆலய வரலாற்றை உள்ளடக்கிய ‘ஆல் விழுது 2’ எனும் சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.
எழுவைதீவு பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கமில்ரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். புனித மரியன்னை பேராலய உதவிப்பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்கள் சிறப்பு விருந்தனராகவும் கலந்து இந்நிகழ்வை சிறப்பித்தனர்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2024/01/10.jpeg)