உரும்பிராய் புனித மிக்கேல் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்மஸ் கரோல் வழிபாடு 26ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை இராஜசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கு ஆலயங்களை சேர்ந்த 10 வரையான பாடகர் குழுக்கள் கலந்து கரோல் கீதங்களை இசைத்தனர்.
இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூறன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் யாழ். மறைமாவட்ட மறைநதி கத்தோலிக்க ஊடக மைய இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் மற்றும் உரும்பிராய் சலேசியன் கன்னியர் மட மேலாளர் அருட்சகோதரி செபஸ்ரியன் மெற்றில்டா ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2024/01/32.jpg)