வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஒளிவிழா 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது.
வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
வேலனை பிரதேச செயலாளர் திரு. சிவகரன், வேலனை வலயக்கல்வி பணிப்பாளர் திரு. ஞானசம்மந்தன் NDB வங்கியின் வடக்கு கிழக்கு பிராந்திய உதவி முகாமையாளர் திரு. சர்வேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சின் உதவி செயலாளர் திருமதி. லாகினி நிருபராஜ் ஆகியார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர்கள், பண்பாட்டு அலுவலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், வேலனை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சர்வமத தலைவர்கள், பொதுமக்களென பலரும் கலந்துகொண்டனர்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2024/01/22-800x478.jpg)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2024/01/24-800x478.jpg)