சர்வதேச மண்தினத்தை முன்னிட்டு யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவனமும் தெல்லிப்பளை பிரதேச சபையும் இணைந்து முன்னெடுத்த சிறப்பு நிகழ்வு 05ஆம் திகதி கடந்த புதன்கிழமை தெல்லிப்பளையில் நடைபெற்றது.
தெல்லிப்பளை பிரதேச சபை தவிசாளர் திரு. சுதர்சன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மரநடுகையும் கழிவகற்றல் முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்பள்ளி சிறார்களுக்கான கழிவு சேகரிப்பு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வடமாகாண பிரதம செயலாளர் திரு சமன் பந்துலசேனா அவர்கள் பிரதம விருந்தினராகவும் வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. ஜகு மற்றும் உள்ளுராட்சி மாகாண செயலாளர் திரு. பிரணவநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/12/Snapshot_112.png)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/12/Snapshot_113.png)