பருத்தித்துறை தும்பளை புனித மரியன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைத்த நிலையில் ஆலய புனிதப்படுத்தல் திருச்சடங்கும் வருடாந்த திருவிழாவும் 08ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை பெனற் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து ஆலயத்தை அசீர்வதித்து திருவிழா திருப்பலியை தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/12/Snapshot_92.png)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/12/Snapshot_94.png)