யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்ட கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்களுக்கான களஅனுபவப்பயிற்சி 27ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை தொடக்கம் 01ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுநிலையினர் செயற்பாடுகள் பற்றிய கருத்துரைகளும் வின்சென்ட் டி போல் சபை, மரியாவின் சேனை மற்றும் பொதுநிலையினர் கழக அங்கத்தவர்களுடனான சந்திப்புக்களும் இடம்பெற்றன.