உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 35 வரையான குருதிக்கொடையாளர்கள் பங்குபற்றி இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.