மட்டக்களப்பு மறைமாவட்ட குருவும் கருவேப்பங்கேணி தூய வனத்து அந்தோனியார் ஆலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை ஜோசப் ஆஞ்சலோ ஞானப்பிரகாசம் ரெட்ணகுமார் அவர்கள் 28ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.
1991ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் திருகோணமலை, மட்டக்களப்பு மறைமாவட்டங்களின் பல பங்குகளிலும் 32 வருடங்களாக இறைபணியாற்றியுள்ளார்.
அருட்தந்தையின் பணிவாழ்வுக்காக இறைவனுக்கு நன்றிகூறி இவரின் ஆன்மா இறைவனில் அமைதிபெற மன்றாடுவோம்.