சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலயத்தில் வானதூதர்களின் பீடப்பணியாளர்களால் முன்னெடுக்கபட்ட தமது சபையின் 6வது ஆண்டு நிறைவு விழா சிறப்பு நிகழ்வு கடந்த 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகளும் மதிய போசன விருந்தும் இடம்பெற்றன. இந்நிகழ்வில் 20 வரையான பீடப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் நாவற்குழி புனித அற்புத அன்னை ஆலயத்தில் மரியாயின் சேனையினரால் முன்னெடுக்கப்பட்ட தமது சபையின் 5வது ஆண்டு நிறைவு தின சிறப்பு நிகழ்வு கடந்த 22ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் தலைமையில் காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கலைநிகழ்வுகளும் மதியபோசன விருந்தும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய கருணை மாதா மரியாயின் சேனையினரும் கலந்து சிறப்பித்தனர்.