யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட அன்பிய கள அனுபவப்பயிற்சி வலைப்பாடு புனித அன்னம்மாள் ஆலயத்தில் நடைபெற்றது.
வலைப்பாடு பங்குத்தந்தை அருட்தந்தை லியான்ஸ் அவர்களின் ஏற்பாட்டில் அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோய் மரியரெட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 20ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை தொடக்கம் 25ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வரை நடைபெற்ற இந்நிகழ்வில் குருமட மாணவர்களுக்கான கருத்துரைகள், அன்பிய தரிசிப்புக்கள், இல்லத்தரிசிப்புக்கள் என்பன இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தேசிய அன்பிய ஆணைக்குழு உறுப்பினர் திரு. நிமால் அவர்கள் வளவாளராக கலந்து அன்பியம் தொடர்பாக கருத்துரை வழங்கினார். அத்துடன் முன்னாள் அன்பிய ஆணைக்குழு தேசிய இயக்குநர் அருட்தந்தை றொகான் அவர்கள் Zoom செயலி ஊடாகவும் மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார்.