மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட புனித டோமினிக்சாவியோ திருவிழா 19ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ஜெயகாந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பீடப்பணியாளர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அருட்சகோதரிகள், பங்குமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.