கொழும்பு கொடகே வெளியீட்டகத்தினால் வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டுவரும் கொடகே தேசிய சாகித்திய விழா கடந்த 15ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு தேசிய நூலக சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நிறுவன இயக்குநர் திரு. தேசபந்து கொடகே அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை அன்புராசா அவர்களால் இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் மும்மொழிகளிலும் எழுதப்பட்ட அன்புள்ள ஆரியசிங்க என்ற நூலுக்கு ‘கொடகே தேசிய இலக்கிய விருது’ வழங்கப்பட்டது.
கடித இலக்கிய முறையில் இலங்கையில் எழுதப்பட்ட முதலாவது ஆங்கில நாவல் இது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.