யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட வருடாந்த திருவிழா 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குருமட அதிபர் அருட்தந்தை செல்வரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
காலை திருப்பலியை தொடர்ந்து கலைநிகழ்வுகளும் நற்கருணை ஆராதனையும் இடம்பெற்றதுடன் அந்நாளை சிறப்பிக்கும் முகமாக அன்று மாலை விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வுகளில் குருமட மாணவர்கள், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதர்கள், ஆசிரியர்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.