யாழ். திருமறைக்கலாமன்றத்தில் அங்கத்தவர்களாக இருந்து அதன் வளர்ச்சியில் பங்காற்றி இறந்தவர்களை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத் திருப்பலி 17ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள கலைத்தூது மணி மண்டபத்தில் நடைபெற்றது.
கியூபா நாட்டில் மறைபணியாற்றும் கிளறீசியன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை பறிங்ரன் லீனஸ் அவர்கள் திருப்பலியை தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார். இத்திருப்பலியில் மன்ற அங்கத்தவர்கள் இறந்தவர்களின் உறவினர்களென பலரும் கலந்து செபித்தனர்