யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான சீன தூதுவர் சீ சென் செங் தலைமையிலான குழுவினர் 06ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு சென்று அங்கு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலில் குருமுதல்வர் அவர்கள் இலங்கையின் பொருளாதார நெருக்கடி காலத்தில் சீனா இலங்கைக்கு வழங்கிய பொருளாதார உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
தொடர்ந்து சீன நாட்டுத்தூதுவர் அவர்கள் இலங்கை மக்களுக்கு உலர் உணவு வழங்குதல், கடல்தொழிலாளர்களுக்கான தொழில் உதவி வழங்குதல் மற்றும் வீடுகள் அமைத்துக்கொடுத்தல் போன்ற திட்டங்களை இங்கு முன்னெடுக்கப்போவதாக தெரிவித்து அதன் ஒரு கட்டமாக சீனா நாட்டு பௌத்தமக்களின் அனுசரணையில் தெரிவுசெய்யப்பட்ட 300 குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகளையும் வழங்கிவைத்தார்.