தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பொதுசன நூலகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வுகள் கடந்த 06ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நடைபெற்றது.
பாடசாலை உப அதிபர் அருட்தந்தை சுமன் அவர்களின் வழிகாட்டலில் கல்லூரியின் நூலகப்பொறுப்பாசிரியர் திருமதி நைல்ஸ் அவர்களின் உதவியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் வாசிப்பு திறனை வளர்க்கும் நோக்கோடு நடமாடும் நூலகம், நாடக ஆற்றுகைகள், கருத்துரைகள், புத்தகக் கண்காட்சி என்பன இடம்பெற்றன.