மல்வம் பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்வம் திருக்குடும்ப ஆலய வளாகத்தில் அமைந்துள்ள ஜஸ்ரின் மண்டபத்தில் நடைபெற்றது.
‘உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்’ எனும் கருப்பொருளில் பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் 20 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.