முல்லைத்தீவு மறைக்கோட்ட பங்குகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட திருவழிபாட்டு கருத்தமர்வு 4ஆம் திகதி கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது.
யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் “திருப்பலியின் மறைபொருள்” பற்றி யாழ். மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களும் “திருவழிபாட்டு திருஇசை” என்னும் தலைப்பில் மானிப்பாய் பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களும் திருஅவை மற்றும் யாழ். மறைமாவட்ட திருவழிபாடு சார்ந்த விதிமுறைகள் தொடர்பாக அருட்தந்தை தயாகரன் அவர்களும் கருத்துரைகள் வழங்கியிருந்தார்கள்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் பங்குகளின் வழிபாட்டு குழு உறுப்பினர்கள், பாடகர் குழாமினர் மற்றும் திருப்பண்ட பீடக்காப்பாளர்கள் என 100ற்கும் அதிகமானவர்கள் கலந்து பயனடைந்தனர்.