மன்னார் மறைமாவட்ட புனித வளனார் திருமறைப்பணி நிலையத்தின் ஏற்பாட்டில் தாரம் 13 உயர்தர மாணவர்களுக்காக முன்னெடுக்கப்ட்ட கிறிஸ்தவ நாகரீக மீளாய்வு வகுப்புக்கள் கடந்த 28ஆம் 29ஆம் திகதிகளில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மற்றும் முருங்கன் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றன.
நிலைய இயக்குனர் அருட்தந்தை றெக்சன் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற வகுப்புக்களில் அமல மரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை றமேஸ் அவர்கள் வளவாளராக கலந்து மாணவர்களை வழிப்படுத்தினார். இவ்வகுப்புக்களில் 180ற்கும் அதிகமான மாணவர்கள் கலந்து பயனடைந்தனர்.