யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மரியாயின் சேனையினரால் முன்னெடுக்கப்பட்ட பிரசீடிய விழா 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் வழிநடத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து ஒன்றுகூடல் நிகழ்வும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் யாழ்.மறைமாவட்ட மரியாயின் சேனை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை ஜேசுதாஸ், மறைமாவட்ட நிர்வாக உறுப்பினர்கள், அயல் பங்கு மரியாயின் சேனை அங்கத்தவர்கள், ஆலய பக்திசபை பிரதிநிதிகளென பலரும் கலந்து சிறப்பித்தனர்.