‘பால்நிலை சமத்துவம்’ என்னும் கருப்பொருளில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தால் இளவாலை யூதாததேயு ஆலய மற்றும் புனித வளனார் விடுதி இளையோர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை எரிக் றொசான் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சட்டத்தரணி திருமதி. காயத்திரி அவர்கள் வளவாளராக கலந்து கருத்துரைகள், குழுச்செயற்பாடுகள் ஊடாக இளையோரை வழிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் 60 வரையான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர்.