இலங்கை ரெனிஸ் சங்கத்தின் அனுசரணையில் ஆரம்ப பாடசாலை மாணவர்களிடையே தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட ரெனிஸ் போட்டி 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இப்போட்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் செல்வன் நர்ஸ்வின் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கான பச்சைப்பந்து தரம் ஒன்று ஒற்றையர் ஆட்டத்தில் முதலாம் இடத்தையும், செல்வன் நிகேதன் 8 வயதுக்குட்பட்டவர்களுக்கான செம்மஞ்சள் பந்து அதிசிறந்த ஒற்றையர் ஆட்டத்தில் முதலாம் இடத்தையும், செல்வன் சர்வின் 8 வயதுக்குட்பட்டவர்களுக்கான செம்மஞ்சள் பந்து தரம் ஒன்று ஒற்றையர் ஆட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்று சம்பியன் பட்டங்களை கைப்பற்றியதுடன் செல்வன் வெல்றியன் மற்றும் நிகேதன் 8 வயதுக்குட்பட்டவர்களுக்கான செம்மஞ்கள் பந்து இரட்டையர் ஆட்டத்தில் இரண்டாம் இடத்தையும், செல்வன் சறோன் 8 வயதுக்குட்பட்டவர்களுக்கான ball achiever ஒற்றையர் ஆட்டத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.