தேசிய இளையோர் வாரத்தை முன்னிட்டு நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை யேசுரட்ணம் அவர்களின் வழிகாட்டலில் இளையோர் ஒன்றிய தலைவர் செல்வன் றெக்னோ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து இளையோருக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றன.
அத்துடன் அன்றைய நாளை சிறப்பிக்கும் முகமாக இளையோர்கள் உடுவில் பிரதேசத்திலுள்ள ஆர்க் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தை தரிசித்து அங்கு நடைபெற்ற மகிழ்வூட்டல் நிகழ்வுகளிலும் பங்குபற்றினார்கள்.