யாழ். மறைக்கோட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு விழா 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இயக்குநர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரைகள் , தலைமைத்துவப்பயிற்சி. குழு விளையாட்டுகள் என்பவற்றுடன் விளையாட்டுக்களில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.
04 இல்லங்களாக பிரிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட இவ் விளையாட்டு நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட பங்குகளிலிருந்து 150 வரையான இளையோர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இவ் விளையாட்டு விழாவின் ஆரம்பத்தில் யாழ் மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்திற்கான புதிய இலட்சினை அறிமும் செய்து வைக்கப்பட்டதுடன் இவ்விளையாட்டு நிகழ்வில் யாழ். மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
தொடர்ந்து மாலை நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன இயக்குநர் அருட்தந்தை யூயின் பிரான்சிஸ், யாழ்.மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை பிறையன் மற்றும் யாழ். இளையோர் சேவை உத்தியோகத்தர் திருமதி. சுபாசினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.