சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் வின்சென்ட் டி போல் சபை அங்குரார்ப்பண நிகழ்வு 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட வின்சென்ட் டி போல் சபை ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களும் மத்திய சபையின் உபதலைவர் திரு. நியூட்டன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் உறுப்பினர்களுக்கான நிர்வாக தெரிவும் இடம்பெற்றது.
யாழ். மறைமாவட்டத்தின் 51ஆவது பந்தியாக புனித அந்தோனியார் பந்தி என்னும் பெயரில் இப்பந்தி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.