சுன்னாகம் சூராவத்தை புனித சின்னத்திரேசாள் ஆலய வருடாந்த திருவிழாவும் ஆலயத்தின் 75 ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வும் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிபாலா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார்.
திருப்பலியின் ஆரம்பத்தில் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மணிக்கோபுரத்தை ஆயர் அவர்கள் ஆசீர்வதித்து திறந்து வைத்ததுடன் திருப்பலி நிறைவில் புதிய குவிமாடத்துக்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார்.
தொடர்ந்து 75வது ஆண்டு யூபிலி நிகழ்வு அங்கு நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.